ஷா ஆலம், செப் 11: பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை
வலுப்படுத்துவதன் மூலம் இந்த ஆண்டு தீவிர வறுமையை முடிவுக்குக்
கொண்டுவருவதற்கான உறுதியை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், இலக்குக் குழுக்களுக்கு வருமானம் ஈட்ட
உதவும் திட்டங்களைச் செயல்படுத்த மொத்தம் RM1.5 பில்லியன்
அங்கீகரிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், இனம் அல்லது
அவர்களின் இருப்பிடம் (நகரம் மற்றும் கிராமப்புறங்கள்) ஆகியவற்றைப்
பொருட்படுத்தாமல், இந்த ஆண்டு தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதாக
அரசாங்கம் சபதம் எடுத்ததுள்ளது, என்று அவர் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் 12வது மலேசியத் திட்டத்தின் (RMK12) அரையாண்டு
மதிப்பாய்வின் சமர்ப்பிப்பின் போது ஏறக்குறைய 114,000 ஏழைக் குடும்பங்களைக்
காப்பாற்ற அரசாங்கம் இன்னும் போராடி வருவதாகக் கூறினார்.
நகர்ப்புற சமூக பொருளாதார அதிகாரமளிக்கும் திட்டம், மக்கள் நல்வாழ்வு மேம்பாட்டுத்
திட்டம் மற்றும் ஒராங் அஸ்லி பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு
வறுமை ஒழிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பிரதமர் மேலும் கூறினார்.
உள்ளூர் சமூகத்தின் வருமானத்தை அதிகரிக்க சரவாக் பூமிபுத்ரா சிறப்புத் திட்டம் மற்றும்
சபா பூர்வீகச் சிறப்புத் திட்டத்தையும் அரசாங்கம் செயல்படுத்துகிறது என்று அவர்
விளக்கினார்.
குறைந்த வருமானம் கொண்ட சீனர்கள் மற்றும் இந்தியர்களுக்காக,க் கம்போங் பாரு
சீனா, மலேசிய இந்திய புளூபிரிண் கீழ் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,
என்று அவர் கூறினார்.








