SELANGOR

கடந்த ஆண்டு இறுதி வரை மொத்தம் 108,373 மலிவு விலை வீடுகள் கட்டப்பட்டுள்ளன - 12வது மலேசியத் திட்டம்

11 செப்டெம்பர் 2023, 7:35 AM
கடந்த ஆண்டு இறுதி வரை மொத்தம் 108,373 மலிவு விலை வீடுகள் கட்டப்பட்டுள்ளன -  12வது மலேசியத் திட்டம்

ஷா ஆலம், செப் 11: 12வது மலேசியத் திட்டத்தின் (RMK12) மூலம் கடந்த ஆண்டு இறுதி

வரை மொத்தம் 108,373 மலிவு விலை வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று பிரதமர்

தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, பொது மற்றும் தனியார் துறைகளின் ஈடுபாட்டின் மூலம் 500,000

வீடுகளை கட்டும் இலக்கை அடைய முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

நம்பிக்கை கொண்டுள்ளதாகப் பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது.

வீட்டு விவகாரத்தில், அரசு எப்போதும் கவனமாக உள்ளது மற்றும் அது சமரசம் செய்ய

முடியாத முக்கிய அம்சமாக உள்ளது. உயரும் வீட்டு விலைகள் மற்றும் வாடகைகள்

மக்களுக்குச் சுமையாக இருப்பதை நாங்கள் அறிவோம், என்று அவர் கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தில் 12வது மலேசியத் திட்டத்தின் இடைக்கால மதிப்பாய்வைத்

தாக்கல் செய்த போது, பாதுகாப்பாக மற்றும் வசதியாக வாழ்வதற்கான இடங்களை

உருவாக்க மக்களின் வீட்டுவசதிகளில் முக்கிய மாற்றம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்

என்றார்.

நகரத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் சொந்த வீடுகளை வாங்குவதற்காக ``ஸ்கீம்

சேவா உந்தோக் பெல்லி`` திட்டமும் விரிவுபடுத்தப்படும் என்று அன்வார் கூறினார்.

``கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பினாங்கு போன்ற முக்கிய நகரங்களில் இலக்கு

குழுக்களுக்காக 800 குடிமைகளை உள்ளடக்கிய வீட்டுவசதி அலகுகளின் முன்னோடித்

திட்டம் செயல்படுத்தப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.