ஷா ஆலம், செப் 11: விவசாயம் தொடர்பான அறிவை பொதுமக்கள்
அதிகப்படுத்துவதற்கான ஒரு தளமாக தற்போது எஸ்ஏசிசி மாலில் நடைபெற்று வரும்
சிலாங்கூர் உள்ளூர் பழத் திருவிழா அமைந்துள்ளது.
சிலாங்கூர் மாநில விவசாயத் துறை ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, தொடர்புடைய
துறைகளின் செயல்பாடுகளையும் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தியது என்று
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த சிலாங்கூர் உள்ளூர் பழத் திருவிழா நவீன விவசாயத் துறையில் பங்கேற்கக்
குறிப்பாக இளைஞர்களின் ஆர்வத்தை மறைமுகமாக ஈர்க்கிறது, அதுமட்டுமில்லாமல்,
நகர்ப்புற மக்களுக்கு விவசாயத் துறையை அறிமுகப்படுத்த உதவுகிறது``.
``இந்த நிகழ்வு மூலம், விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் இத்துறையை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம் என்றார்.
மேலும், எங்களிடம் சொந்த பிராண்ட் பழங்கள் உள்ளன, அதைப் பற்றி பெருமைப்பட
வேண்டும். இந்த பழத்தை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முடியும், மேலும்
இளைஞர்களை நவீன விவசாயிகளாக மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இதில்
பலாப்பழத்தை உரிப்பது மற்றும் பழத்தின் எடையை யூகிப்பது உள்ளிட்ட பல்வேறு
சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
ஜெலாஜா அக்ரோ சிலாங்கூரை முன்னிட்டு ஜேபிஎன்எஸ் மற்றும்
சிலாங்கூர் பொருளாதார திட்டமிடல் பிரிவு இணைந்து ஏற்பாடு
செய்துள்ள இந்த திட்டம் பார்வையாளர்களுக்கு RM20 மதிப்புள்ள 3,000
இலவசக் கூப்பன்களையும் வழங்குகிறது.








