ஷா ஆலம், செப் 11: கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க 46,000 சோலார் தெரு
விளக்குகளை (எல்இடி) ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) தீவிரமாக நிறுவி வருகிறது.
இந்த நிறுவல் பணி 2018 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது
4,000 மீதம் உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக முடிவடையும் என
எதிர்பார்க்கப்படுவதாகவும் துணை மேயர் தெரிவித்தார்.
எம்பிஎஸ்ஏ பகுதியில் சுமார் 64,000 மெல்டோல் தெரு விளக்குகள் உள்ளன. ஆனால்
அவற்றில் 18,000 பொதுப்பணித் துறை மற்றும் தெனகா நேஷனல் பெர்ஹாட்டைச்
சேர்ந்தவை, மீதமுள்ளவை எம்பிஎஸ்ஏவைச் சேர்ந்தவை ஆகும். எம்பிஎஸ்ஏவைச் சேர்ந்த
விளக்குகள் அனைத்தும் ழுமையாக எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன என்று
செரெமி தர்மன் கூறினார்.
மேலும், தெரு விளக்குகளுக்கான கட்டணங்கள் முந்தைய ஆண்டுகளில் RM12.9
மில்லியனாக இருந்ததை விட 2018 முதல் கடந்த ஆண்டு வரை RM5.7 மில்லியனாகக்
குறைந்துள்ளது என்றார்.
தெருவிளக்கு சேதத்தைக் கண்காணிப்பதை விண்ணப்பத்தின் மூலமாகவும் செய்யலாம்.
இதன் வழி, அதிகாரிகளின் பணியை எளிதாக்க முடியும், என்று அவர் கூறினார்.








