SELANGOR

யுனிசெல் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு கண்காட்சி ஏற்பாடு

8 செப்டெம்பர் 2023, 9:59 AM
யுனிசெல் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு கண்காட்சி ஏற்பாடு

ஷா ஆலம்,  செப் 8: செப்டம்பர் 6 முதல் 10 வரை 17வது யுனி செல் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தினம் மற்றும் மலேசியா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 'வாத்திகா பெமாஸ்யூரன் கெமெர்டெகான்' என்ற கருப்பொருளில் கண்காட்சி நடைபெறும் என்று யுனிசெல் அறிவித்தது.

"இந்த கண்காட்சி மலேசியாவின் சுதந்திர வரலாறு தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நமது நாட்டின் வரலாற்றை மாற்றிய ஒரு தசாப்தக் கால பயணத்தை புரிந்து கொள்ள பார்வையாளர்ககு ஒரு வாய்ப்பாக அமையும்.

“சுதந்திர தந்தையின் காலம் தொடங்கி இன்று வரை நாட்டின் வரலாற்றில் தங்கள் பெயர்களை உருவாக்கிய நபர்களைப் பற்றியும் இந்த கண்காட்சியில் இடம்பெறும்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

கூடுதலாக, துணைவேந்தரின் புகைப்படம், ஆல்பம் சேகரிப்பு, பட்டமளிப்பு புத்தகச் சேகரிப்பு, மூலோபாய மைய சேகரிப்பு மற்றும் ஜூபா சேகரிப்பு ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெறும்.

பட்டமளிப்பு விழா முழுவதும் நைட் ரன், ஜூம்பத்தான் கண்காட்சி, மேனியா@யுனிசெல் குரல் போட்டி மற்றும் புதையல் வேட்டை உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் நடைபெறும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.