ஷா ஆலம், செப் 8: நாளை முதல் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் நடத்தும் ஹைட்ரோ ஃபேமிலி ஆன் வீல்ஸ் நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளும் இலவசக் காபியும் காத்திருக்கின்றன.
அந்நிறுவனத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் திகதி வரை தெரிவு செய்யப்பட்ட ஏழு இடங்களுக்குப் பயணித்து இந்த நிகழ்வை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஹைட்ரோ ஃபேமிலி ஆன் வீல்ஸ் நிகழ்வில் போலிங் மற்றும் ஹைட்ரோ ஃபேமிலியுடன் செல்ஃபி போன்ற சுவாரஸ்யமான நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வருகையாளர்கள் பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்வதோடு ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
மேலும் தகவலுக்கு, https://www.airselangor.com/








