SELANGOR

ஊழல் தடுப்பு வியூகத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும்

8 செப்டெம்பர் 2023, 4:36 AM
ஊழல் தடுப்பு வியூகத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும்

சிப்பாங், செப் 8 - தேசிய ஊழல் தடுப்பு

வியூகத்தை (என்.ஏ.சி.எஸ்.) அரசாங்கம்

அறிமுகப்படுத்தும் என்று அரசாங்கத்

தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது

ஸூக்கி அலி தெரிவித்தார்.

2019-2023 தேசிய ஊழல் எதிர்ப்பு

நடவடிக்கை திட்டத்தின் தொடர்ச்சியாக

இந்த என்.ஏ.சி.எஸ். இருக்கும் என்று அவர்

கூறினார்.

நேற்று இங்கு நடைபெற்ற நிர்வாகம்,

உயர்நெறி மற்றும் ஊழல் எதிர்ப்பு தேசிய

மாநாட்டின் நிறைவு விழாவில்

அவர் ஆற்றிய உரையில் அவர் இதனைக்

குறிப்பிட்டார். அவரது உரையை பொது

சேவைத் துறையின் துணைத் தலைமை

இயக்குநர் (மேம்பாடு) டத்தோ அஸார்

அகமது வாசித்தார்.

கடந்த 2019 ஜனவரியில் தொடங்கப்பட்ட

என்.ஏ.சி.பி. திட்டம் தற்போது

இறுதியாண்டை எட்டியுள்ளது என்று ஸூக்கி

தெரிவித்தார்.

ஊழலற்ற மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக

மலேசியா மாறுவதற்கான இலக்கு என்

ஏ.சிபி.யில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள

ஆறு பரிமாணங்களுக்குள்

கட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும் ஸூக்கி

கூறினார்.

மாறாக, மற்ற துறைகளிலும் நல்ல

நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கான

முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இதன்

மூலம் நிர்வாகம், உயர்நெறி மற்றும் ஊழல்

எதிர்ப்பு கொள்கை சீர்திருத்தங்கள் மக்களுக்கு

நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்

என்று அவர் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் நிர்வாகம், பொதுத்துறை நிர்வாகம்,

பொது கொள்முதல், சட்ட மற்றும் நீதித்துறை

நடவடிக்கைகள், சட்ட அமலாக்கம் மற்றும்

பெருநிறுவன நிர்வாகம் ஆகியவையே அந்த

ஆறு பரிமாணங்களாகும்.

என்.ஏ.சி.எஸ். திட்டத்தை தொடங்க

அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக எக்ஸ்

பதிவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.