SELANGOR

போராளிகளின் சேவைகளைப் பாராட்ட வேண்டும் - டத்தோ மந்திரி புசார்

8 செப்டெம்பர் 2023, 3:58 AM
போராளிகளின் சேவைகளைப் பாராட்ட வேண்டும் - டத்தோ மந்திரி புசார்

ஷா ஆலம்,  செப் 8: சுதந்திர உணர்வைக் கொண்டாடுவதில் போராளிகளின் சேவைகளை நினைவுக்கூற டத்தோ மந்திரி புசார் பொதுமக்களை அழைக்கிறார்.

இன்று நாடு அடைந்துள்ள சுதந்திரம், சம்பந்தப்பட்ட போராளிகளின் தியாகம், வியர்வை, கண்ணீர் இல்லாமல் கிடைத்துவிடவில்லை என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"போராளிகளின் சேவைகளைப் பாராட்டவும் மற்றும் நாட்டின் சுதந்திரத்தின் வரலாற்று தோற்றத்தைப் புரிந்துகொள்ளவும் மலேசியர்களை நான் அழைக்கிறேன். அவற்றில் லெப்டேனன் அட்னான் சைடி அவர்கள் கடைசி துளி இரத்தம் வரை ஜப்பானிய வீரர்களுக்கு எதிராகப் போராடிய துணிச்சலான கதை உள்ளது.

"அவர் சிலாங்கூரைச் சேர்ந்தவர், கம்போங் சுங்கை ரமாலில் பிறந்தார் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவை ஜப்பானியர்களால் கைப்பற்றப் படாமல் பாதுகாக்க ராயல் மலாய் சிப்பாய் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூலில் தெரிவித்துள்ளார்.

எனவே, லெப்டேனன் அட்னான் சைடியைச் சிலாங்கூர் சுதந்திர உருவமாக முடிசூட்டி அவரின் சேவைகளையும் தியாகங்களையும் மாநில அரசு பாராட்டுகிறது என்றார்.

“இந்த விருது லெப்டினன்ட் அட்னான் சைடியின் கொள்ளுப் பேரன் முகமட் அஸ்ருல் ஹலீம் அஹ்மத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

கடைசி சொட்டு ரத்தம் வரை ஜப்பானிய ராணுவத்தை எதிர்த்துப் போராடிய லெப்டேனன் அட்னான் சைடியின் வீரம் என்றென்றும் நினைவுகூரப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.