SELANGOR

சிலாங்கூர் மாநில உள்ளூர் பழத் திருவிழா 2023 இல் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

8 செப்டெம்பர் 2023, 3:56 AM
சிலாங்கூர் மாநில உள்ளூர் பழத் திருவிழா 2023 இல் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், செப்டம்பர் 7: செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் சிலாங்கூர் மாநில உள்ளூர் பழத் திருவிழா 2023 இல் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

எஸ்ஏசிசி மாலில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் RM20 மதிப்புள்ள 3,000 இலவசப் கூப்பன்கள் முதலில் வருகை புரியும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன என சிலாங்கூர் மாநில விவசாயத் துறை தெரிவித்தது.

டுரியான் பழ புதிர், அக்ரோ ஹாட் வீல் மற்றும் பலாப்பழம் உரித்தல் போன்ற போட்டிகள் வருகையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில விவசாயத் துறை தெரிவித்தது.

மேலும், உள்ளூர் பழம் கருப்பொருள் கொண்ட மூலிகை படத்தொகுப்பு போட்டி, தேசப்பற்று மற்றும் உள்ளூர் பழங்கள் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்ட ஆடை அலங்காரப் போட்டி, டிக்டோக் வீடியோ போட்டி மற்றும் வண்ணம் தீட்டும் போட்டி ஆகியவையும் இடம்பெறும்.

"ஷா ஆலமில் உள்ள எஸ்ஏசிசி மாலில் நடைபெறும் சிலாங்கூர் மாநில பழத் திருவிழாவில் ஏற்பாடு செய்துள்ள நடவடிக்கைகளில் கலந்து கொள்வோம்.

வேளாண்மைத் துறையின் பதிவு கவுன்டரில் விண்ணப்பப் பாரங்களைப் பெறலாம் என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் மற்றும் இது ஜெலாஜா அக்ரோ சிலாங்கூரை முன்னிட்டு ஜேபிஎன்எஸ் மற்றும் சிலாங்கூர் பொருளாதார திட்டமிடல் பிரிவு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.