SELANGOR

ஜெலாஜா ஜாப்கேர் சிலாங்கூரில் சுவாரஸ்யமான தொழில் வாய்ப்புகள்

8 செப்டெம்பர் 2023, 3:05 AM
ஜெலாஜா ஜாப்கேர் சிலாங்கூரில் சுவாரஸ்யமான தொழில் வாய்ப்புகள்

ஷா ஆலம், செப்டம்பர் 8 : செப்டம்பர் 14 அன்று ஜெலாஜா ஜாப்கேர் சிலாங்கூரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்வு மாநில அரசாங்கத்துடன் இணைந்து சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் UOC ஹாலில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என ``MYFututeJobs`` தெரிவித்தது.

"சிலாங்கூரில் குறிப்பாகச் சிப்பாங்கைச் சுற்றியுள்ள மக்களுக்கு இது ஒரு நற்செய்தி ஆகும். உங்கள் அனைவருக்கும் பல சுவாரஸ்யமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதில் 23க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர்.

"இப்போதே பதிவு செய்து, இந்த வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

ஆர்வமுள்ளவர்கள் myfuturejobs.gov.my/careerfair/ என்ற இணைப்பில் பதிவு செய்யலாம் அல்லது போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

பொதுமக்கள் இந்நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு 019-604 7038 (ஹயின்), 019-267 5764 (அம்மார்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.