SELANGOR

சுற்றுலா இடங்களை மேம்படுத்த பொருட்கள் அல்லது வளங்கள் பகிர்ந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

7 செப்டெம்பர் 2023, 3:32 AM
சுற்றுலா இடங்களை மேம்படுத்த பொருட்கள் அல்லது வளங்கள் பகிர்ந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், செப் 7: அம்பாங்கில் உள்ள வரலாற்றுச் சுற்றுலா இடங்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அல்லது வளங்களைப் பகிர்ந்து கொள்ள அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் பொதுமக்களை வரவேற்கிறது.

அம்பாங்கின் வரலாறு தொடர்பான பழைய புகைப்படங்கள், உபகரணங்கள் மற்றும் கலைப் பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் சுற்றுலா, கல்வி மற்றும் மகளிர் பிரிவு, இளைஞர், சமூகம் மற்றும் நிலப்பரப்புத் துறை ஈடுபட்டுள்ளது.

"அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் இந்த விஷயத்தைப் பற்றிப் பகிர விரும்பும் எந்தவொரு தரப்பினரையும் அல்லது தனிநபரையும் சந்தித்து விவாதிக்கத் தயாராக உள்ளது" என்று முகநூல் மூலம் உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஏதேனும் தகவலுக்குப் பொதுமக்கள் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தை 012-627 7210 (கமில்) மற்றும் 010-534 3292 (ஹனிம்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.