SELANGOR

ஷா ஆலம் வாகனம் இல்லாத தினத்தை முன்னிட்டு சாலைகள் மூடப்படும்

6 செப்டெம்பர் 2023, 11:36 AM
ஷா ஆலம் வாகனம் இல்லாத தினத்தை முன்னிட்டு சாலைகள் மூடப்படும்

ஷா ஆலம், செப் 6 - ஷா ஆலம் வாகனம் இல்லாத தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) பிரிவு 14 இல் உள்ள டத்தாரான் கெமர்டேகா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும்.

இந்த சாலைகள் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை மூடப்படும் என்று ஷா ஆலம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

“இந்த மூடல் நடவடிக்கை ஆயத்தப் பணிகளுக்காகவும், வாகனம் இல்லாத் திட்டத்தை ஒழுங்கமைப்பதற்காகவும் ஆகும்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்நடவடிக்கையில் பெர்சியாரான் பெர்பண்டரான், பெர்சியாரான் பண்டார் ராயா, பெர்சியாரான் டத்தோ மந்திரி மற்றும் பெர்சியாரான் தாசிக் ஆகிய சாலைகளும், பெர்சியாரான் டமாய் மற்றும் பெர்சியாரான் மஸ்ஜிட் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படும்.

இத்திட்டத்தில் பங்கேற்கத் திட்டமிடுபவர்கள் ஷா ஆலம் மேபேங்க் பிரதான கிளையின் கட்டிடத்தை ஒட்டி அமைந்துள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறு மாநகராட்சி பரிந்துரைக்கிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.