SELANGOR

சிலாங்கூரில் உள்ள மூன்று ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன

6 செப்டெம்பர் 2023, 4:25 AM
சிலாங்கூரில் உள்ள மூன்று ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன

ஷா ஆலம், செப் 6: இன்று அதிகாலை முதல் பெய்த கனமழை காரணமாகச் சிலாங்கூரில் உள்ள மூன்று ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9.45 மணி நிலவரப்படி, அனைத்து ஆறுகளின் நிலை இன்னும் கட்டுக்குள் உள்ளது என நீர்ப்பாசன மற்றும் வடிகால் அமைப்பு துறை (ஜேபிஎஸ்) தகவல் வெளியிட்டது.

SKC பாலத்தில் உள்ள சுங்கை பெர்ணம் சாதாரண அளவான 16.60 மீட்டரை விட 18.92 மீட்டர் (மீ) அளவை பதிவு செய்துள்ளது.

மேலும், கம்போங் சுங்கை செலிசெக்கில் உள்ள சுங்கை பெர்ணம் 26.25 மீட்டர் அளவைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது (சாதாரண அளவு 23 மீ).

சுங்கை யூ 1 1.93 மீட்டர் அளவோடு எச்சரிக்கை நிலையில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் நதிகளின் நீர் நிலையைப் பற்றி அறிய https://publicinfobanjir.water.gov.my/aras-air/data-paras-air/?state=SEL&lang=en ஐப் நாடவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.