SELANGOR

``ஷா ஆலாமில் சுத்தமான கழிவறை விருது 2023`` - ஷா ஆலம் மாநகராட்சி

6 செப்டெம்பர் 2023, 3:23 AM
``ஷா ஆலாமில் சுத்தமான கழிவறை விருது 2023`` - ஷா ஆலம் மாநகராட்சி

ஷா ஆலம், செப் 6: ஷா ஆலம் மாநகராட்சி ``ஷா ஆலாமில் சுத்தமான கழிவறை விருது 2023`` போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. அப்போட்டிக்கு RM22,200 ரொக்கப் பரிசை வழங்குகிறது.

அப்போட்டியில் பெட்ரோல் நிலையங்கள், ஷாப்பிங் சென்டர்கள், உணவு வளாகங்கள், வழிபாட்டு தளங்கள், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் உட்பட ஆறு கழிப்பறை பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

"இந்த போட்டியில் பொது கழிப்பறை பிரிவில் எம்பிஎஸ்ஏ பகுதியில் உள்ள அனைத்து வளாகங்களும் பங்கேற்க அழைக்கப்படுகின்றன" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர் RM1,500, இரண்டாம் வெற்றியாளர் RM1,200 மற்றும் மூன்றாம் வெற்றியாளர் RM1,000 பெறுவார்கள் என்று எம்பிஎஸ்ஏ அறிவித்தது.

மேலும், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்கள் பங்கேற்பு சான்றிதழும் பெறுவார்கள்.

இப்போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி முடிவடைகிறது. நுழைவுப் படிவம் மற்றும் போட்டி நிபந்தனைகளை https://bit.ly/PertendinganAnugerahTandasBersihShahAlam2023 என்ற இணைப்பின் மூலம் காணலாம் என்று எம்பிஎஸ்ஏ அறிவித்தது.

வெற்றியாளர்கள் நவம்பர் மாதம் உலகக் கழிப்பறை தினக் கொண்டாட்டத்தில் அறிவிக்கப்படுவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.