SELANGOR

குவா டாமாய் எக்ஸ்ட்ரீம் கார்னிவலில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு - செலாயாங் நகராண்மை கழகம்

5 செப்டெம்பர் 2023, 10:38 AM
குவா டாமாய் எக்ஸ்ட்ரீம் கார்னிவலில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு - செலாயாங் நகராண்மை கழகம்

ஷா ஆலம், செப் 5: செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறும் குவா டாமாய் எக்ஸ்ட்ரீம் கார்னிவலில் கலந்து கொள்ள செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) பொதுமக்களை அழைக்கிறது.

குவா டாமாய் எக்ஸ்ட்ரீம் பூங்கா, கம்போங் வீரா டமாயில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் ஒன்பது சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இருப்பதாக உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

"குவா டாமாய் எக்ஸ்ட்ரீம் கார்னிவல் 2023 இல் கலந்து கொண்டு உங்கள் வார இறுதியை எங்களுடன் செலவிட வாருங்கள். இந்த கார்னிவலில் குழந்தைகளுக்கான நிகழ்வுகள் உட்பட பல விளையாட்டுகளும் நடைபெறும்.

"இந்நிகழ்வில் ஃபுட்சல், வில்வித்தை மற்றும் ஏரோபிக்ஸ் ஆகியவை சுவாரஸ்யமான நடவடிக்கைகளும் நடைபெறும். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகளும் காத்திருக்கின்றன" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தகவலுக்குச்  செலாயாங் நகராண்மை கழக நிலப்பரப்பு துறையை 03-61266016 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.