ஷா ஆலம், செப் 5: சிலாங்கூர் குடிமக்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் சிலாங்கூர் மாநில அளவிலான ஒற்றுமை கூடைப்பந்து விளையாட்டு லீக் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு RM3,000 ரொக்கப் பரிசு வெல்ல அழைக்கப்படுகிறார்கள்.
போட்டியில் வெற்றி பெறும் அணி தேசிய அளவில் போட்டியிட மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தம் தகுதியைப் பெறும் என்றும், அதன் மூலம் RM10,000 ரொக்கப் பரிசை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சிலாங்கூர் மாநில கூடைப்பந்து கழகம் அறிவித்தது.
"இந்தப் போட்டி செப்டம்பர் 16 ஆம் தேதி ஷா ஆலமில் உள்ள பானாசோனிக் ஸ்டேடியத்தில் நடைபெறும். இதன் மூலம் தேசிய அளவில் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவைக் கண்டறியும்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி செப்டம்பர் 2 முதல் 16 வரை பெர்லிஸ் முதல் ஜொகூர் வரை நடைபெறும்.
போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள அணிகள் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து விண்ணப்பப்பாரம் மற்றும் விதிகளைப் பெறலாம்.
போட்டி தொடர்பான கூடுதல் தகவல்களுக்குப் பொதுமக்கள் 019-969 8856 (அட்னின்), 011-6104 0412 (ஜூலைஹா) அழைக்கலாம் அல்லது nerballuniti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.








