SELANGOR

தாவாஸ் திட்டத்தின் உறுப்பினர்களின் தகவல்களை உடனடியாக புதுப்பிக்கவும்

5 செப்டெம்பர் 2023, 8:17 AM
தாவாஸ் திட்டத்தின் உறுப்பினர்களின் தகவல்களை உடனடியாக புதுப்பிக்கவும்

ஷா ஆலம், செப் 5:  அடுத்த ஆண்டு முதலாம் வகுப்பில் நுழையும் தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் திட்டத்தின் (தாவாஸ்) உறுப்பினர்களின் தகவல்களை புதுப்பிக்கும்படி அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பள்ளி நுழைவு உதவித் திட்டத்தின் (பிபிஎம்எஸ்) உறுப்பினர்கள் உதவிகளைப் பெறுவதற்கு, அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் தகவல்களைப் புதுப்பிப்பு செய்ய வேண்டும் என்று யாயாசன் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) தெரிவித்தது.

"2024 இல் முதல் வகுப்பில் சேரும் 2017 இல் பிறந்த தாவாஸ் உறுப்பினர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் கவனத்திற்கு, உங்கள் தகவலை உடனடியாக https://tawas.yawas.my/login.php இல் புதுப்பிக்கவும்``.

"உங்கள் குழந்தை வழங்கவிருக்கும் பிஎம்பிஎஸ் தாவாஸ் உதவியை தவறவிடாமல் தடுப்பதற்காக உடனடியாகத் தகவல்களைப் புதுப்பிக்கவும்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் பிறக்கும் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தாவாஸ் 2008 இல் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் உறுப்பினர்கள் 18 வயதை அடையும் போது RM1,500 பெறுவார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.