SELANGOR

மைத்துனரால் பாலியல் வன்கொடுமை

5 செப்டெம்பர் 2023, 8:15 AM
மைத்துனரால் பாலியல் வன்கொடுமை

ஷா ஆலம், செப்டம்பர் 5: வங்சா மாஜூவில் பெண் ஒருவர் தனது மைத்துனரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

அதன் தொடர்பில் கடந்த சனிக்கிழமை முதல் ஆறு நாட்கள் சந்தேக நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த வாரம் முதல் தேடப்பட்ட அச் சந்தேக நபர் இரவு 11.30 மணியளவில் கைது செய்யப் பட்டதாகப் புக்கிட் அமான் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவின் தலைமை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

"இன்னும் தலைமறைவாக உள்ள மேலும் நான்கு சந்தேக நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்" என்று உதவி கமிஷனர் சித்தி கம்சியா ஹாசன் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் வங்சா மாஜூவில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 27 வயது பெண் ஒருவர் ஐந்து ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகப்பட்டதன் தொடர்பாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.

பாதிக்கப்பட்ட பெண் வங்சா மாஜு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றவியல் சட்டம் 375(பி) பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.