SELANGOR

வாகனம் இல்லா தினத்தை முன்னிட்டு சாலைகளின் ஒரு பகுதி மூடப்படும்

5 செப்டெம்பர் 2023, 4:42 AM
வாகனம் இல்லா தினத்தை முன்னிட்டு சாலைகளின் ஒரு பகுதி மூடப்படும்

ஷா ஆலம், செப் 5- இம்மாதம் 10ஆம் தேதி இங்குள்ள டத்தாரான்

மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் வாகனம் இல்லா தினத்தை

முன்னிட்டு ஷா ஆலம் மாநகரிலுள்ள சாலைகளில் ஒரு பகுதி

போக்குவரத்துக்கு மூடப்படும்.

இந்நிகழ்வையொட்டி மூடப்படும் சாலைகளில் பெர்சியாரான பண்டாராயா,

பெர்சியாரான் பெர்பண்டாரான், பெர்சியாரான் தாசேக், பெர்சியாரான்

மஸ்ஜிட், பெர்சியாரான் டத்தோ மந்திரி பெசார் மற்றும் பெர்சியாரான்

ஆகியவையும் அடங்கும்.

இந்த சாலைகள் அனைத்தும் அதிகாலை 6.30 மணி தொடங்கி காலை 9.30

மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக

மற்றும்ற பொது உறவுப் பிரிவின் தலைவர் கூறினார்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேற்குறிப்பிட்ட சாலைகளை

குறிப்பிடப்பட்ட நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக்

கொண்டார்.

இந்த நிகழ்வுக்கு மாநகர மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

என்பதோடு மாற்று வழிகளைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை

மேற்கொள்ள வேண்டுமாய் அவர் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டார்.

ஷா ஆலம் மாநகர மக்களிடையே ஆரோக்கிய வாழ்க்கை முறையை

ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் ஏரோபிக் உணவு

விற்பனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் 03-55222734

என்ற எண்களில் மாநகர் மன்றத்தின் பொது உறவுப் பிரிவைத் தொடர்பு

கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.