ECONOMY

மாநில நிலையிலான தேசிய தினக் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

31 ஆகஸ்ட் 2023, 4:58 AM
மாநில நிலையிலான தேசிய தினக் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஷா ஆலம், ஆக 31- நாட்டின் 66வது தேசிய தினத்தை வரவேற்கும் விதமாக நேற்றிரவு இங்குள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த கோலாகல நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டும் விதமாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 66 துறைகளின் அணிவகுப்பு, ஐ-பேட்டன் படைப்பு, வாணவெடி உள்ளிட்ட நிகழ்வுகளும் அதில் அடங்கும்.

இது தவிர, உள்நாட்டு கலைஞர்களான ஜியானா ஜைன் மற்றும் ஏவிய், இமான் திரோய் ஆகியோரின் கலைப்படைப்புகளும் இடம் பெற்றன. 

இந்நிகழ்வுகளை நேரில் காண முடியாதவர்களின் வசதிக்காக யூடியுப் சிலாங்கூர் டிவி மற்றும் மைடிவி மானா-மானா அலைவரிசைகளின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.