SELANGOR

ரெடாங் கடற்கரை துப்புரவு பணி திட்டத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டது

29 ஆகஸ்ட் 2023, 2:51 AM
ரெடாங் கடற்கரை துப்புரவு பணி திட்டத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டது

ஷா ஆலம், ஆகஸ்ட் 29: ரெடாங் கடற்கரை, சிகிஞ்சனைச் சுத்தம் செய்வதற்கான துப்புரவு பணி திட்டத்தைச் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) ஆகஸ்ட் 27 அன்று ஏற்பாடு செய்தது.

இந்த சமூக சேவை நடவடிக்கைகளில் சிகிஞ்சான் தொகுதி உறுப்பினர் இங் சுவி லிம் மற்றும் யூனிகேஎல் பிசினஸ் ஸ்கூல் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

"இந்நிகழ்ச்சியின் நோக்கமானது கடற்கரை பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு வளர்ப்பதற்கும் அதிகரிப்பதற்கும் ஆகும்.

"மேலும், இந்நிகழ்ச்சி சுற்றுச்சூழல் மீது அன்பை வளர்ப்பது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏனெனில் கடற்கரையும் நீரின் ஆதாரமாக உள்ளது" என்று முகநூல் மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கை மூலம் கடற்கரையை சுற்றி குப்பைகளைச் சேகரிப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது.

அதே நிகழ்ச்சியில், லுவாஸ் ஊழியர்கள் கடற்கரைக்கு வருகை புரிந்த பொதுமக்களுக்கு நீர் ஆதாரங்களைப் பராமரிப்பது குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.