SELANGOR

16 பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மடிக்கணினி மற்றும் டெஸ்க்டாப்பை இரவலாகப் பெற்றனர்

28 ஆகஸ்ட் 2023, 8:38 AM
16 பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மடிக்கணினி மற்றும் டெஸ்க்டாப்பை இரவலாகப் பெற்றனர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 28: அம்பாங் நாடாளுமன்றத்தில் மொத்தம் 16 பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மடிக்கணினி மற்றும் கணினி மேசை (டெஸ்க்டாப்) இரவலாகப் பெற்றனர்.

சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) ஏற்பாடு செய்துள்ள மடிக்கணினி மற்றும் டெஸ்க்டாப் இரவல் திட்டத்தின் மூலம் இது செயல்படுத்தப்பட்டது அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார்.

"தேவைப்படுபவர்கள் பயன்பாட்டிற்காக இந்த திட்டத்தை மேற்கொண்டதற்கு பிபிஏஎஸ்-க்கு நன்றி,``.

"இந்த திட்டம் உண்மையில் தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த திட்டம் அவர்களுக்குத் தொடர்ந்து உதவ முடியும் என்று நான் நம்புகிறேன்," என அவர் முகநூலில் தெரிவித்தார்.

இந்த உதவி தேவைப்படுபவர்கள், அம்பாங் நாடாளுமன்ற சேவை மையத்திற்கு வந்து விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

" மடிக்கணினி அல்லது 'டெஸ்க்டாப்' யில் வாங்குவதில் சிக்கல் இருந்தால், நீங்கள் அம்பாங் நாடாளுமன்ற சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக பிபிஏஎஸ்-க்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

" மாணவர்கள் டிஜிட்டல் துறையில் பின்தங்குவதை நாங்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.

இரவல் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சிலாங்கூர் பொது நூலகங்களில் மடிக்கணினி மற்றும் டெஸ்க்டாப் இரவல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிஏஎஸ் முன்பு தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.