SELANGOR

"போகாஷி’’ உணவுக் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தில் 35 பேர் பங்கேற்பு 

28 ஆகஸ்ட் 2023, 8:33 AM
"போகாஷி’’ உணவுக் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தில் 35 பேர் பங்கேற்பு 

ஷா ஆலம், ஆகஸ்ட் 28: புக்கிட் பண்டாரயா சமூகத் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற உணவுக் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தில், U11 பகுதியைச் சுற்றி வசிப்பவர்கள் மொத்தம் 35 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டு முறையைப் பயன்படுத்தி உணவுக் கழிவுகளை உரமாக்குவது குறித்து பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும் என ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) தெரிவித்தது.

"Bio Terra Solution Sdn Bhd நிறுவனம் இந்த திட்டத்திற்காக அழைக்கப்பட்ட ஆலோசகர் ஆகும். இந்நிறுவனம் உணவு கழிவுகளை உரமாக்குவது அதன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது.

"போகாஷி முறையைப் பயன்படுத்தி கழிவுகளை உரம் ஆக்குவதற்கான சரியான வழிகள் பங்கேற்பாளர்களுக்கு கற்பிக்கப்பட்டன" என்று எம்பிஎஸ்ஏ இன்று முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

இந் நிகழ்ச்சி முடிந்ததும், பங்கேற்பாளர்களுக்கு வீடுகளில் உள்ள உணவு கழிவுகளை உரமாக்குவதற்கு உரம் தொட்டிகள் மற்றும் போகாஷி பவுடர் ஆகியவை வழங்கப்படுகின்றன.

போகாஷி என்பது ஜப்பானின் பிரபலமான உரமாக்கல் முறையாகும். இது அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் கொண்ட உரமத்தைத் தயாரிக்க ஆக்ஸிஜன் இல்லாமல் உணவுக் கழிவுகளைப் பயன்படுத்தும் செயல்முறை ஆகும்.

போகாஷி முறையில் பயன்படுத்தப்படும் கழிவுகளில் பழமையான காய்கறிகள், பழத் தோல்கள், சமையலறைக் கழிவுகளான காபி மற்றும் தேநீர் கழிவுகள், காகிதக் கழிவுகள் மற்றும் பிற கரிமப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.