SELANGOR

சிறுநீரக நோயாளிகளின் சிகிச்சைக்குச் சொக்சோ பேருதவி- அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

28 ஆகஸ்ட் 2023, 7:45 AM
சிறுநீரக நோயாளிகளின் சிகிச்சைக்குச் சொக்சோ பேருதவி- அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

பெட்டாலிங் ஜெயா, ஆக 28-

நாட்டில் சிறுநீரக நோயாளிகளின்

எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து

வருகிறது என்று மனிதவள அமைச்சர் வ.

சிவகுமார் தெரிவித்தார்.

தற்போது கிட்டத்தட்ட 30,000 க்கும்

மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளனர்.

சொக்சோ எனப்படும் சமூக நல பாதுகாப்பு

அமைப்பு 2022 இல் அதன்

பங்களிப்பாளர்களுக்கு டயாலிசிஸ்

சிகிச்சைக்காக 300 மில்லியன் வெள்ளிக்கும்

மேல் செலவிட்டுள்ளது .

டயாலிசிஸ் சிகிச்சைக்காக

பங்களிப்பவர்களிடமிருந்து சொக்சோ

ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 புதிய

விண்ணப்பங்களைப் பெறுகிறது

கடந்த 1999 ஆம் ஆண்டில் செக்சோவின்

டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவு 1.12

மில்லியன் வெள்ளியாக இருந்தது.

ஆனால் இப்போது சிகிச்சை தேவைப்படும்

பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையும் கடந்த

இரண்டு தசாப்தங்களில் அதிகரித்திருப்பதாக

அவர் சொன்னார்.

1999 இல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட

பங்களிப்பாளர்களுக்கு டயாலிசிஸ்

வசதிகளை சொக்சோ அறிமுகப்படுத்தியது.

புதிதாக உருவாக்கப்பட்ட கிள்ளான்

சொக்சோ சிறுநீரக புதிய சிகிச்சை மையத்தில்

பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு

வருகிறது.

நாட்டில் மேலும் புதிய சிறுநீரக சிகிச்சை

மையத்தை அமைத்து கூடுதல் சிறுநீரக

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது

தொடர்பாக அண்மையில் சுகாதார

அமைச்சரை நேரில் சந்தித்து

பேச்சுவார்த்தையை நடத்தியதாக அவர்

சொன்னார்.

மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

கூடுதல் உடல் பயிற்சியை மேற்கொள்ள

வேண்டும்.

இவ்வேளையில் ஆரோக்கியமான

தொழிலாளர்களை மனிதவள அமைச்சு

பெரிதும் எதிர்பார்க்கிறது என்று காசிங்

ரேஞ்சர்ஸ் கிளப்பின் 10 ஆம் விழாவுக்கு

தலைமையேற்று உரையாற்றியபோது அவர்

இதனை

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.