ஷா ஆலம், 27 ஆகஸ்ட்: மலேசிய சுற்றுலா மற்றும் சாகச நிறுவனங்களின் கண்காட்சியை (மாட்டா) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டிக்டாக் போட்டியில் RM5,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை சுற்றுலா சிலாங்கூர் வழங்குகிறது.
இப்போட்டி ‘மலேசியாவின் சிறப்புமிக்க இடமாகச் சிலாங்கூர்’ (Selangor as Malaysia’s Featured Destination) என்ற கருப்பொருளில் செப்டம்பர் 1 முதல் 3 வரை நடைபெறும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘மலேசியாவின் சிறப்புமிக்க இடமாகச் சிலாங்கூர் எனும் கருப்பொருளில் செப்டம்பர் 2023இல் நடைபெறவுள்ள மாட்டா கண்காட்சியில் சிலாங்கூர் சுற்றுலா மீண்டும் இடம்பெறவுள்ளது.
"சிலாங்கூர் பெவிலியனில் நடக்கும் மாட்டா கண்காட்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டிக்டாக் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கலந்து கொண்டு RM 5,000 மதிப்புள்ள பயண வவுச்சரை வெல்ல வாய்ப்பு உள்ளது,``.
மலேசியா சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும் மாட்டா கண்காட்சி சுமார் 200,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கேற்க விரும்புவோர் செய்ய வேண்டியது:
-
MITEC முதல் நிலையில் அமைந்துள்ள சிலாங்கூர் பெவிலியனில் உங்கள் வீடியோவை எடுக்கவும்.
-
பூசிங் சிலாங்கூர் டூலு! பாடலைப் பயன்படுத்துங்கள்.
-
படத்தின் விளக்கத்தில் ‘மலேசியாவின் சிறப்புமிக்க இடமாகச் சிலாங்கூர்’ என்பதைச் சேர்க்கவும்.
-
30 முதல் 60 வினாடிகளுக்குள் ஆக்கப்பூர்வமான டிக்டாக் வீடியோவை உருவாக்கவும்.
-
#PusingSelangorDulu, #TourismSelangor #MattaFairPavilionSelangor என்ற அடையாளத்துடன் வீடியோவைப் பதிவேற்றவும்








