SELANGOR

கிள்ளான் பிபிஏஎஸ் ஏற்பாட்டில் ஆடை அலங்காரம் மற்றும் இணைய மின்-சுவரொட்டி போட்டிகள்

28 ஆகஸ்ட் 2023, 7:35 AM
கிள்ளான் பிபிஏஎஸ் ஏற்பாட்டில் ஆடை அலங்காரம் மற்றும் இணைய மின்-சுவரொட்டி போட்டிகள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 28: கிள்ளான் சிலாங்கூர் பொது நூலக கழகம் (பிபிஏஎஸ்) ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 16 வரை சுதந்திர தினம் மற்றும் மலேசியா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆடை அலங்காரம் மற்றும் இணையம் வழி சுவரொட்டி தயாரிக்கும் போட்டிகளை நடத்துகிறது.

ஆடை அலங்காரப் போட்டி பாலர் மற்றும் முதலாம் முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், இணையச் சுவரொட்டி ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முகநூலில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

"பங்கேற்பாளர்கள் சுதந்திரத்தினத்தை கருப்பொருளாக கொண்ட ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து, அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் பிபிஏஎஸ் கிள்ளானின் முகநூல் இன்பாக்ஸில் அப்புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும்.

"அதே போல், இணையச் சுவரொட்டி தயாரிக்கும் போட்டியின் பங்கேற்பாளர்கள் சுயமாகச் சுவரொட்டியை உருவாக்கி, தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் பிபிஏஎஸ் கிள்ளானின் முகநூலின் இன்பாக்ஸில் பதிவேற்ற வேண்டும்" என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒன்று முதல் மூன்றாம் இடங்களை வெல்பவர்களுக்கு ஹம்பர் வடிவில் பரிசுகளும், நான்கு முதல் 10வது இடங்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும் தகவலுக்குப், போட்டியின் சுவரொட்டியைப் பார்க்கவும் அல்லது 03-3371 9429 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.