SELANGOR

காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்புக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம்

28 ஆகஸ்ட் 2023, 4:19 AM
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்புக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம்

பெட்டாலிங் ஜெயா ஆக 28-

பல விதமான விளையாட்டு போட்டிகளை

நடத்தி முத்திரை பதித்து வரும் காசிங்

ரேஞ்சர்ஸ் விளையாட்டு கிளப் சொந்த

கட்டடத்தை வாங்கும் முயற்சிக்கு ஆதரவு

வழங்கும் வகையில் மனிதவள அமைச்சர் வ.

சிவகுமார் 50,000 மானியம் வழங்குவதாக

அறிவித்தார்.

காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் 10 ஆம் ஆண்டு

விழா மற்றும் நிதி திரட்டும்

விழா நேற்று மிகப்பெரிய அளவில்

பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்றது.

காசிங் ரேஞ்சர்ஸ் கிளப் தலைவர் வேல்குமார்

தலைமையில் அதன் பொறுப்பாளர்கள்

சொந்த கட்டடத்தை வாங்கும் முயற்சியில்

இந்த விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு

செய்துள்ளனர்.

மலையேறும் போட்டி மற்றும் பேட்மிண்டன்

போட்டிகளில் ஆர்வம் செலுத்தி வரும் காசிங்

ரேஞ்சர்ஸ் கிளப்பில் இப்போது 100

உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

உடல் நலத்தை பேணும் வகையில்

வாரத்திற்கு மூன்று முறை காசிங் ரேஞ்சர்ஸ்

கிளப் உறுப்பினர்கள் மலையேறும்

பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இது பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு

மிகவும் நல்லது. இந்நிலையில் காசிங்

ரேஞ்சர்ஸ் கிளப் சொந்த கட்டடத்தை

வாங்கும் முயற்சிக்கு முழு ஆதரவு

வழங்குவேன் .

மேலும் மனிதவள அமைச்சர் என்ற முறையில்

காசிங் ரேஞ்சர்ஸ் கட்டட நிதிக்கு 50,000

வெள்ளியை வழங்குவதாக பெரும்

கைத்தட்டலுக்கு இடையே அவர்

அறிவித்தார்.

இந்த விழாவில் பெட்டாலிங் ஜெயா

நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங்,

கோத்தா டமான்சாரா சட்டமன்ற உறுப்பினர்

இஸ்வான் காசிம் , புக்கிட் காசிங் சட்டமன்ற

உறுப்பினர் ராஜிவ், செந்தமிழ் செல்வர் ஓம்ஸ்

பா. தியாகராஜன், மனித நேய மாமணி

ரதனவள்ளி அம்மையார், சுங்கை பூலோ

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

சிவராசா, சுங்கை பூலோ

பிரமுகர் டத்தோஸ்ரீ டாக்டர் சுகுமாரன்,

சக்கரவர்த்தி கோபால் உட்பட பலரும் கலந்து

சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.