SELANGOR

45,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பேக் பெடுலி உதவியைப் பெற்றன - யாயாசான் மெஸ்ரா சிலாங்கூர்

28 ஆகஸ்ட் 2023, 3:06 AM
45,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பேக் பெடுலி உதவியைப் பெற்றன - யாயாசான் மெஸ்ரா சிலாங்கூர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 28: யாயாசான் மெஸ்ரா சிலாங்கூர் 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து 45,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவு அடங்கிய பேக் பெடுலி உதவியைப் பெற்றுள்ளன.

குறைந்த திறன் மற்றும் வருமானம் பாதிக்கப்பட்ட பெறுநர்களுக்கு இந்த உதவி விநியோகிக்கப்பட்டது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி சஹாரிமான் அரிஃபின் கூறினார்.

"இத்திட்டம் கோவிட்-19 தொற்று நோய்க்குப் பிறகு அறிமுகப்படுத்தப் பட்டாலும், இப்போது வரை தொடர்கிறது.

"இந்த உதவியைப் பெறுபவர்களில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவசர உதவிகள் தேவைப்படுபவர்கள் அதாவது பணி நீக்கங்கள் மற்றும் விபத்துக்கள் போன்றவை ஆகும்," என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இதற்கிடையில், அந்த குழுக்களுக்குப் பேக் பெடுலியை விநியோகிப்பதில் சமூக தலைவர்களுடன் தனது தரப்பு எப்போதும் ஒத்துழைக்கிறது என்று விளக்கினார்.

"சமூகத் தலைவர்களும் இதில் பங்கு வகிக்கின்றனர். ஏனென்றால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

"பேக் பெடுலி வழங்கப்படுவதற்கு முன்பு அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு அனுப்புவார்கள்," என்று சஹாரிமான் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.