SELANGOR

எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் நாளை மேலும் மூன்று இடங்களில் தொடரும்

25 ஆகஸ்ட் 2023, 1:42 PM
எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் நாளை மேலும் மூன்று இடங்களில் தொடரும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 25: சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (பிகேபிஎஸ்) ஏற்பாடு செய்துள்ள எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் நாளை மேலும் மூன்று இடங்களில் தொடரும்.

இத்திட்டம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கம்போங் பத்து தீகா மசூதி, பாங்கி மற்றும் எம்பிஎஸ்ஏ பூலை மண்டபம், பிரிவு 27, ஷா ஆலம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இதே விற்பனை செர்டாங் மலேசியா விவசாய கழக எக்ஸ்போ பார்க் கால்நடைத் தளத்திலும் (மேப்ஸ்) கால்நடை தினம் மற்றும் விலங்குகள் நல தினம் 2023 யை முன்னிட்டு நடத்தப்படும்.

இந்த மலிவு விற்பனையானது முந்தைய ஜுவாலான் எஹ்சான் ரக்யாட் விற்பனையின் தொடர்ச்சியாகும், இது ஜூன் 1 ஆம் தேதி மறுபெயரிடப்பட்டது மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்துடன் (KPDN) இணைந்து அடுத்த டிசம்பர் வரை தொடரும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.