SELANGOR

ஜெலாஜா ஜாப்கேர் மூலம் சிலாங்கூரில் 1,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

25 ஆகஸ்ட் 2023, 8:36 AM
ஜெலாஜா ஜாப்கேர் மூலம்  சிலாங்கூரில் 1,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 25: நாளை மெனாரா யாயாசன் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் ஏற்பாடு செய்துள்ள ஜெலாஜா ஜாப்கேர் சிலாங்கூரில் 1,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Socso) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று யாயாசான் சிலாங்கூர் தெரிவித்தது. இதில் 10க்கும் மேற்பட்ட முதலாளிகள் பல்வேறு சுவாரசியமான வேலைகளை வழங்கவுள்ளனர்.

"இந்த ஜெலாஜா ஜாப்கேர் சிலாங்கூர் வேலை தேடும் அனைவருக்கும் திறந்திருக்கும். ஆகவே, கிடைக்கும் வேலை வாய்ப்புகளை தவறவிடாதீர்கள் மற்றும் இப்போதே பதிவு செய்யுங்கள்!

"இந்த வாய்ப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வேலை தேடுபவர்களுக்கு உதவுவோம்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் eiscentre.perkeso.gov.my/employment/socsocareerfair என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.