SELANGOR

பயன்படுத்திய சமையல் எண்ணெயை விற்க வாய்ப்பு - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

25 ஆகஸ்ட் 2023, 8:29 AM
பயன்படுத்திய சமையல் எண்ணெயை விற்க வாய்ப்பு - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 25: பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டத்தின் மூலம் ஒரு கிலோவுக்கு 2 ரிங்கிட் என்ற விலையில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை வாங்குவதற்கு அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் தயாராக உள்ளது.

இந்த நிகழ்வு நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு சுராவ் இதிஹாடியா, தாமான் மெலோர் அம்பாங்கில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்று உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதே நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை விதுரி அபார்ட்மென்ட் தாமான் கோசாஸில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், டத்தாரான் கம்போங் சுங்கை செபுத்தே லெம்பா ஜெயாவில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தொடரும்.

"இந்த திட்டம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் ஒரு முன்முயற்சியாகும்," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஏதேனும் கேள்விகள் திருமதி. நோராவை 012-3284047 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பிப்ரவரி 4 அன்று, அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு செய்த சுற்றுச்சூழல் நாள் போட்டியின் மூலம் கிட்டத்தட்ட 10 டன் சமையல் எண்ணெய் மற்றும் 12 டன் மின்சார அல்லது மின்னணு கழிவுகளை (இ-கழிவு) வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட சமூகத்திலிருந்து 47 உள்ளீடுகள் வந்தன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.