ஷா ஆலம், ஆகஸ்ட் 24: இந்த சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சிப்பாங் நகராண்மை கழகம் (எம்.பி.எஸ்.பாங்) பூர்வீகக் குடியினர் திருவிழா நிகழ்ச்சி சிப்பாங்கில் உள்ள கெலின்சிங் ஓராங் அஸ்லி கிராமத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சி உலக பழங்குடியினர் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமிட் விளையாட்டு, கலை கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் போன்ற போட்டிகளும் நடைபெறவுள்ளன.
கிராம மக்களுக்காக சமையல் நடவடிக்கையும் நடைபெறும். ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையின் (ஜாகோவா) ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் ``தேமுவான்`` பூர்வக் குடியினரையும் உள்ளடக்கியது.
23 டிசம்பர் 1994 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UN) பூர்வக் குடியினரின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதோடு, அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் பூர்வக் குடியினர் திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் சிப்பாங் நகராண்மை கழகத்தை 03-8319 0200/0300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








