SELANGOR

ஷா ஆலம் மாநகராட்சி ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டும் நிகழ்வு

25 ஆகஸ்ட் 2023, 6:28 AM
ஷா ஆலம் மாநகராட்சி ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டும் நிகழ்வு

ஷா ஆலம், ஆகஸ்ட் 25: ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) நேற்று ஏற்பாடு செய்திருந்த சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சியில் மொத்தம் 100 கிளப் உறுப்பினர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பள்ளிகளில் ஜலோர் கெமிலாங்கை வழங்கியதாக அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் தலைவர் கூறினார்.

"அவை ராஜா மூடா பிரிவு 4, பிரிவு 16 ஷா ஆலம், பிரிவு 24 மற்றும் பிரிவு 20 ஆகிய தொடக்க தேசியப்பள்ளிகள் ஆகும்.

"பங்கேற்பாளர்கள் ஷா ஆலம் நகரைச் சுற்றி 20 கிலோமீட்டர் தூரம் பயணித்தனர்" என்று முகமட் அசார் முகமது ஷெரீப் கூறினார்.

இந்த சைக்கிள் ஓட்டும் திட்டம், ஷா ஆலமில் பங்கேற்பாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே தேசப்பக்தி உணர்வை வெளிப்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் ஷா ஆலம் மாநகராட்சியின் அணுகுமுறைகளில் ஒன்றாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.