SELANGOR

மலேசியாவின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறும்பட வீடியோ போட்டி

25 ஆகஸ்ட் 2023, 4:21 AM
மலேசியாவின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறும்பட வீடியோ போட்டி

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: மலேசியாவின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'Semarak Merdeka MPKj 2023' என்ற குறும்பட வீடியோ போட்டியை காஜாங் நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

காஜாங் குடியிருப்பாளர்கள் சுதந்திரத்தின் கருப்பொருளின் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான வீடியோக்களை உருவாக்க அழைக்கப்படுகிறார்கள். அதன் மூலம், பணத்தை வெல்லும் வாய்ப்பும் உள்ளது என்று உள்ளூர் அதிகாரசபை அதன் வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

இப்போட்டி பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் மற்றும் வெற்றியாளர் ஒரு சான்றிதழுடன் RM200 ரொக்கத்தை பெறுவார். ஆனால், ஒவ்வொரு பங்கேற்பாளரும் இண்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் திக் தோக் பயன்பாடுகளில் காஜாங் நகராண்மை கழகம் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கைப் பின் தொடர்பவராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு காணொளியும் தேசபக்தியின் கூறுகள் மற்றும் மதிப்பு தக்க கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

பங்கேற்பாளர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இரவு 11.59, ஆகஸ்ட் 27 க்கு முன், #mpkjsemarakmerdeka என்ற அடையாளத்துடன் காஜாங் நகராண்மை கழகத்தின் அதிகாரப்பூர்வக் கணக்கை 'டேக்' செய்ய வேண்டும்.

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப விவரங்களை https://forms.gle/JtMsEdj2j5huTthw9 என்ற இணைப்பில் சமர்ப்பிக்கலாம் அல்லது நிரல் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.