SELANGOR

வறுமை ஒழிப்பு திட்டம் - நகர்ப்புற குடியிருப்பாளர்களை மையமாகக் கொண்டுள்ளது

25 ஆகஸ்ட் 2023, 3:18 AM
வறுமை ஒழிப்பு திட்டம் - நகர்ப்புற குடியிருப்பாளர்களை மையமாகக் கொண்டுள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 25: சிலாங்கூரில் வறுமை ஒழிப்பு திட்டத்தில் தொற்றுநோயால் வருமான ஆதாரத்தைக் இழந்த நகர்ப்புற குடியிருப்பாளர்களை மையமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு தகுந்த கல்வியை வழங்க திட்டமிட்டுள்ளது. அதன் மூலம், அவர்கள் சுய காலில் நிற்கவும் மற்றும் வருமானம் ஈட்டவும் முடியும் என வறுமை ஒழிப்பு பொறுப்பு துறை உறுப்பினர் கூறினார்.

நகரத்தில் உள்ள சிறு தொழில் முனைவோரின் தொழில்கள் தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்காக வறுமை ஒழிப்பு திட்டத்தைத் தொடரவும் தனது தரப்பு உத்தேசித்துள்ளதாக பாப்பாராய்டு கூறினார்.

"தொற்று நோயின் போது பாதிக்கப்பட்ட நகரவாசிகளுக்கு நான் உதவி செய்தபோது இந்த நிலைமை தெளிவாகக் காணப்பட்டது. குடும்பத் தலைவர்கள் வேலை இழந்ததால் பல நகர்ப்புற ஏழைகள் சிரமப்படுகிறார்கள்.

"நகர்ப்புறங்களில் வசிக்கும் பலர் மிகவும் ஏழ்மையில் உள்ளனர், அவர்கள் கடுமையான சிரமங்களை அனுபவித்து வருகின்றனர், அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை அனுபவம் எனக்கு உணர்த்தியது," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சிலாங்கூர் 2023 பட்ஜெட்டில், வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு RM2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி என்று அறிவித்தார்.

இந்த மாநிலத்தில் உள்ள வியாபாரிகள், வர்த்தகர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்களுக்கு உதவுவதற்காக குறிப்பாக உபகரணங்கள் அல்லது தொழில் உதவி இயந்திரங்களும் வழங்கப்படுகிறது.

2013 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, கடந்த ஜூலை மாதம் வரை RM21.6 மில்லியன் ஒதுக்கீட்டில் 4,321 சிறு தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.