SELANGOR

500 ஜாலூர் கெமிலாங் கொடிகள் விநியோகிக்கப்பட்டன - ஶ்ரீ கெம்பாங்கன்

24 ஆகஸ்ட் 2023, 10:58 AM
500 ஜாலூர் கெமிலாங் கொடிகள் விநியோகிக்கப்பட்டன - ஶ்ரீ கெம்பாங்கன்

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: சுதந்திர மாதத்தைக் கொண்டாடும் வகையில், தாமான் சுங்கை பெசி இண்டா, ஶ்ரீ கெம்பாங்கனைச் சுற்றியுள்ள மக்களுக்கு மொத்தம் 500 ஜாலூர் கெமிலாங் கொடிகள் விநியோகிக்கப் பட்டன.

கடந்த சனிக்கிழமை ஜாலூர் கெமிலாங் கொடிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டது அதாவது அருகில் உள்ள காலை சந்தை வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது என அதன் பிரதிநிதி வோங் சியூ கி கூறினார்.

"குடியிருப்பாளர்களிடையே தேசப்பக்தி உணர்வை வளர்ப்பதற்கும், வரவிருக்கும் தேசியத் தினக் கொண்டாட்டங்களை உற்சாகப் படுத்துவதற்கும் இந்த சிறு முயற்சியை நாங்கள் செயல் படுத்தினோம்.

தாய்நாட்டின் மீதான அன்பின் அடையாளமாக ஶ்ரீ கெம்பாங்கன் மக்களை ஒன்றிணைத்து ஜாலூர் கெமிலாங்கைப் பறக்கவிட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

"உங்கள் குடியிருப்பு, வாகனம் அல்லது வணிக வளாகத்தில் ஜாலூர் கெமிலாங்கைப் பறக்கவிட்டு, ஒற்றுமை உணர்வைக் காட்டுங்கள்" என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.