SELANGOR

கார் மீது மோதிய மரக் கிளைகளை சிறப்பு நடவடிக்கை படையினர் அகற்றினர் -பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

24 ஆகஸ்ட் 2023, 8:20 AM
கார் மீது மோதிய மரக் கிளைகளை சிறப்பு நடவடிக்கை படையினர் அகற்றினர் -பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் (எம்பிபிஜே) சிறப்பு நடவடிக்கை பிரிவினர் நேற்று ஜாலான் 16/18, பிரிவு 16 இல் கார் மீது மோதிய மரக் கிளைகளை வெட்டி அகற்றினர்.

அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டான் வீரா கார் மீது மரக்கிளை விழுந்ததாக புகார் வந்த நிலையில் விரைவுப் படை பிரிவினர் ஐவர் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இந்த சம்பவத்தில்  சம்பந்தப்பட்ட வாகனத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

"விரைவுப் படையினருக்கு நன்றி," என்று முகநூல் மூலம் எம்பிபிஜே தெரிவித்தது.

மரக் கிளைகளை வெட்டும் பணி முடிவடைந்தவுடன் அடுத்த நடவடிக்கைக்காக துப்புரவுத் தரப்பிடம் ஒப்படைக்கப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.