SELANGOR

பள்ளி விடுமுறையை முன்னிட்டு பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் - சிலாங்கூர் பொது நூலகம்

24 ஆகஸ்ட் 2023, 4:46 AM
பள்ளி விடுமுறையை முன்னிட்டு பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் - சிலாங்கூர் பொது நூலகம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 3 வரை பள்ளி விடுமுறையை முன்னிட்டு பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகளை ராஜா துன் உடா நூலகம், பிரிவு 13 யில்  ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

மாணவர்களுக்கு நாளிதழ்களைப் படித்தல், சாக்லேட் பந்துகளை உருவாக்குதல், ஓவியம் வரைதல், இசை வகுப்புகளில் கலந்து கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) ஏற்பாடு செய்துள்ளது.

"இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. தியேட்டர் ஷோக்கள், சமையல் வகுப்புகள் மற்றும் கைவினைப் பயிற்சி வகுப்புகள் போன்ற நடவடிக்கைகளுக்கு மட்டும் RM3க்கு குறைவான கட்டணம் வசூலிக்கப்படும்.

"தங்கள் குழந்தைகளை அனுப்ப ஆர்வமுள்ள பெற்றோர்கள் சிலாங்கூர் பொது நூலகக் கழக இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தினசரி நடவடிக்கை அட்டவணையைப் பார்க்கலாம்" என்று பிபிஏஎஸ் முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒன்பது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்கள் இமூடா கார்ட்டூனிஸ்டுகளுடன் 30 ரிங்கிட் கட்டணத்தில் வண்ண கேலிச்சித்திரம் வரைதல் வகுப்பில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் தகவல்களுக்குப் பொதுமக்கள் ராஜா துன் உடா நூலகத்தை 03-5519 7667 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.