ஷா ஆலம், ஆகஸ்ட் 24: ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) ஆகஸ்ட் 26 அன்று, பிளாசா ஷா ஆலம், பிரிவு 9 இன் வாகன நிறுத்துமிடத்தில் நடமாடும் அலுவலகச் சேவைகளை வழங்குகிறது.
ஷா ஆலம் நடமாடும் அலுவலகச் சேவை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படத் தொடங்கும் என்று உள்ளூர் அதிகாரசபை (பிபிடி) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.
"மதிப்பீட்டு வரியைச்ச் சரி பார்த்தல் மற்றும் செலுத்துதல், வாகன நிறுத்தும் அபராத்தைச் சரி பார்த்தல் மற்றும் செலுத்துதல், புகார் கவுண்டர், வணிகர் உரிமத்தின் நிலையைச் சரி பார்த்தல், திட்ட புத்தகங்களின் விற்பனை மற்றும் பல சேவைகளை ஷா ஆலம் நடமாடும் அலுவலகச் சேவை வழங்குகிறது," எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இச்சேவை வார இறுதி நாட்களில் மக்கள் கவுண்டருக்கு வராமல் மேற்கண்ட பணிகளை எளிதாக மேற்கொள்ள உதவுகிறது.








