SELANGOR

 'ஃபோட்டோ சேலஞ்ச்' 2023 போட்டிக்கு RM1,000 ரொக்கப் பரிசு - காஜாங் நகராண்மை கழகம்

22 ஆகஸ்ட் 2023, 7:14 AM
 'ஃபோட்டோ சேலஞ்ச்' 2023 போட்டிக்கு RM1,000 ரொக்கப் பரிசு - காஜாங் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: RM1,000 ரொக்கப் பரிசை வழங்கும் 'ஃபோட்டோ சேலஞ்ச்' 2023 போட்டியை காஜாங் நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

"உணவு புகைப்பட விளக்கம்" என்ற கருப்பொருளுடன் இப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை காஜாங் ஸ்டேடியத்தில் நடைபெறும் என உள்ளூர் அதிகாரசபை (பிபிடி) தெரிவித்துள்ளது.

"போட்டிக்கு அனுப்பப் படும் புகைப்படங்கள் காஜாங் நகராண்மை கழக நிர்வாகப் பகுதியில் எடுக்கப் பட்டு, மதியம் 12.30 மணிக்குள் எம்பிகேஜே போட்டோ சேலஞ்ச் 2023 @ ``Karnival Sate`` மற்றும் ``Kopi Secocok Bersama`` கவுண்டருக்கு அனுப்பப்பட வேண்டும்.

"ஒவ்வொரு பங்கேற்பாளரும் குறைந்தபட்சம் மூன்று மற்றும் அதிகபட்சம் ஏழு புகைப்படங்களை  250 வார்த்தைகளுக்கு மிகாமல் விளக்கத்துடன் அனுப்ப வேண்டும்" என்று முகநூல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இடத்திற்கு (RM1,000), இரண்டாவது இடத்திற்கு (RM700), மூன்றாவது இடத்திற்கு (RM400), நான்காம் இடத்திற்கு (RM200) மற்றும் ஐந்தாம் இடத்திற்கு (RM100) என ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இப்போட்டி மலேசியக் குடிமக்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் மற்றும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படாது.

ஆர்வமுள்ளவர்கள் google form link https://docs.google.com/.../1FAIpQLSc9VhD1ywd.../viewform மூலம் பதிவு செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.