SELANGOR

பண்டமாரான் ஜெயாவில் உடைந்த கால்வாயின் கரைகளை எம்.பி.கே. விரைந்து சீரமைத்தது

22 ஆகஸ்ட் 2023, 6:06 AM
பண்டமாரான் ஜெயாவில் உடைந்த கால்வாயின் கரைகளை எம்.பி.கே. விரைந்து சீரமைத்தது

ஷா ஆலம், ஆக 22- கம்போங் பண்டமாரான் ஜெயாவில் உடைந்த

கால்வாய் கரைகளை கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.) விரைந்து

சீரமைத்தது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில்

தாங்கள் புகாரைப் பெற்றதாக நகராண்மைக் கழகம் கூறியது. உடனடியாக

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு கால்வாயின் கரைகள்

உடைந்துள்ளதைக் கண்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் உயிருடற் சேதம்

ஏற்படவில்லை.

அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவாக அப்பகுதியில்

உள்ள பின்புறத் தடம் போக்குவரத்துக்கு மூடப்பட்டது என நகராண்மைக்

கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த சம்பவம் தொடர்பில் டெலிகோம் மலேசியா, இண்டார் வாட்டர்

குழுமம் ஆகிய தரப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோலக்

கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரியும் தகவல்

அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை ஆய்வு செய்தார்.

சம்பவ இடத்தில் மேலும் மோசமான பாதிப்புகள் ஏற்படாமலிருப்பதை

உறுதி செய்ய கிள்ளான் நகராண்மைக் கழகம் மற்றும் இதர அரசுத்

துறைகளுக்கு தாம் தகவல் அளித்ததாக அஸ்மிஸாம் தனது டிவிட்டர்

பதவில் குறிப்பிட்டுள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.