SELANGOR

எஸ்பிஎம் 2023 A+ வரலாறு பாடப் பட்டறையில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

17 ஆகஸ்ட் 2023, 6:49 AM
எஸ்பிஎம் 2023 A+ வரலாறு பாடப் பட்டறையில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஆகஸ்ட் 17: இவ்வாண்டு எஸ்.பி.எம் (SPM) தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் எஸ்பிஎம் 2023 A+ வரலாறு பாடப் பட்டறையில் பங்கேற்கச் சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (PPAS) மாணவர்களை அழைக்கிறது.

இந்த பட்டறை முதல் 55 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இலவச திட்டமாகும்.

மேலும், இந்த பட்டறை காலை 8.30 முதல் மதியம் 1 மணி வரை புஸ்தகா ராஜா துன் உடாவில் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வுக்குத் தயாராகும் வகையில் ஒரு வருடத்திற்கு முன்பு கற்றுக்கொடுக்கப்பட்ட பாடங்களை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பை பயன்படுத்தவும்.

"எஸ்.பி.எம் வரலாறு பாடத்தில் திறமையான பயிற்றுனர்கள், கேள்வி அமைப்பு, பதில் நுட்பங்கள் மற்றும் தேர்வுக்கான தயாரிப்பு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வார்கள். இப்போதே பதிவு செய்யுங்கள், இடங்கள் குறைவாக உள்ளன," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்வமுள்ளவர்கள் 017 – 578 1807 என்ற எண்ணில் திருமதி ஷரிவாவைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.