SELANGOR

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைப் பார்வையிட இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும்

16 ஆகஸ்ட் 2023, 9:14 AM
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைப் பார்வையிட இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16: பெட்ரோனாஸின் 49 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த மலேசியர்கள் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைப் பார்வையிட இலவச டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஒரு நபருக்கு ஒரு டிக்கெட் மட்டுமே என்ற வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது என பெட்ரோனாஸ் இரட்டை போபுரம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அவர்கள் டவரில் உள்ள தகவல் கவுண்டரில் டிக்கெட்டைப் பெற்று கொள்ள மைகாட் அல்லது மைகிட் அட்டைகளைக் காட்ட வேண்டும். தகுதியான நபர்கள் பணியில் இருக்கும் ஊழியர்களிடம் தேதி மற்றும் நேரத்தைத் தெரிவிக்க முடியும், ஆனால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த டிக்கெட் தகுதியான நபர்கள் கோபுரத்தில் உள்ள ஸ்கை பிரிட்ஜ் மற்றும் ஓபர்வேஷன் டெக்கை பார்வையிட அனுமதிக்கிறது.

இந்த சிறப்புச் சலுகை ஆகஸ்ட் 31 வரை மட்டுமே வழங்கப்படும்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.