SELANGOR

சிலாங்கூர் அளவிலான சுதந்திரக் கவிதை ஒப்புவிக்கும் போட்டி ஏற்பாடு

16 ஆகஸ்ட் 2023, 9:07 AM
சிலாங்கூர் அளவிலான சுதந்திரக் கவிதை ஒப்புவிக்கும் போட்டி ஏற்பாடு

ஷா ஆலம், ஆகஸ்ட் 16: இந்த ஆண்டு சுதந்திர மாதக் கொண்டாட்டங்களை உற்சாகப்படுத்தும் வகையில், செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறும் 37வது சிலாங்கூர் அளவிலான சுதந்திரக் கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில எழுத்தாளர்கள் மற்றும் நலன்புரி சங்கம் (கெமுதி) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி ராஜா துன் உடா நூலகத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

"இந்தப் போட்டியில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம்.

"பங்கேற்பாளர்கள் கே சாரங் செண்டரவாசிஹ் என்ற கவிதைத் தொகுப்பைப் பயன்படுத்துவார்கள்" என்று சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) இன்று முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் https://docs.google.com/forms/d 1O9vOyUtjSoXofUJQguuF_e7w8fUnVvWPzl9X77sfSXg/ இல் பதிவு செய்யலாம் மற்றும் விண்ண்ப்பத்திற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 ஆகும்.

இந்த கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் தேசிய எழுத்தாளர்கள் சங்கம் (கபேனா), மொழி மற்றும் நூலக கவுன்சில் (டிடிபி) மற்றும் மலாய் இயற்கை கலை ஆர்வலர்கள் சங்கம் (பெர்னிலம்) ஆகியவற்றின் ஒத்துழைப்பும் உள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.