ஷா ஆலம், ஆகஸ்ட் 16: ஆகஸ்ட் 25 முதல் 27 வரை நடைபெறும் ஜோம் ரியூ பெர்சாமா டிஸ்கவரி பிகேஎன்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.
பிகேஎன்எஸ் கழகத்தின் 59வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இதில் அதிர்ஷ்ட குலுக்கல், புதையல் வேட்டை, ரியல் எஸ்டேட் கண்காட்சிகள், டிக்டோக் போட்டிகள், கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் பிகேஎன்எஸ் வீடு வாங்கும் திட்டத்தின் துவக்கம் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் நடைபெறும்.
"பிகேஎன்எஸ் வீடு வாங்குபவர்கள் RM5,900 மதிப்புள்ள சமையலறை அலங்காரப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் சம்சோங் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும்" என்று முகநூல் மூலம் பிகேஎன்எஸ் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வைப் பற்றிய ஏதேனும் கேள்விகள் இருந்தால் பிகேஎன்எஸ் விற்பனை நிர்வாகிகளை 03-5525 0300 மற்றும் 03-5502 0189 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 010-928 0187 என்ற எண்ணில் புலனத்திற்குக் குறுந்தகவல் அனுப்பலாம் அல்லது www.pkns.com.my என்ற இணையதளத்தை நாடவும்.








