ஷா ஆலம், ஆகஸ்ட் 16: காஜாங் நகராண்மை கழகம் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள வீட்டு மனை குடியிருப்பாளர்களின் பிரதிநிதி கவுன்சில் அளவிலான சிறந்த அண்டை அயலார் 2023ஆம் போட்டியில் பங்கேற்க அழைக்கிறது.
இப்போட்டி தரை வீடுகள், நடுத்தர விலை அடுக்குமாடி வீடுகள் மற்றும் குறைந்த விலை அடுக்குமாடி வீடுகள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என உள்ளூர் அதிகாரசபை (PBT) தெரிவித்துள்ளது.
"வெற்றியாளருக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பெறுபவர்களுக்கு கணினி செட் மற்றும் பிரிண்டர் யூனிட் கிடைக்கும்.
"முதலாம் இடத்திற்கு 5,000 ரிங்கிட் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல், இரண்டாவது முதல் ஐந்தாம் இடம் வரைக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இப்போட்டியின் பங்கேற்பு 7 முதல் 28 ஆகஸ்ட் 2023 திறந்திருக்கும்.
ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் காஜாங் நகராண்மை கழக https://www.mpkj.gov.my/ms இணையதளத்தில் பங்கேற்பு படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது 017-3487532 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.








