ஷா ஆலம், ஆகஸ்ட் 15: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) அக்டோபர் 6
ஆம் தேதி தொடங்கும் சிலாங்கூர் வணிக எக்ஸ்போ 2023க்கு (செல்பிஸ் 2023) மூன்று
நாட்களில் 10,000 வருகையாளர்களின் வரவை இலக்காகக் கொண்டுள்ளது.
செத்தியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியானது,
தொழில்முனைவோருக்கு விற்பனைப் பொருட்களை அறிமுகப்படுத்தி அதனை
மேம்படுத்துவதில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிகேஎன்எஸ்
தெரிவித்துள்ளது.
200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன, மேலும் பிகேஎன்எஸ் வணிகஉறுப்பியம் என்ற (பிஸ்க்லப் ) உறுப்பினர்களுக்கு RM2,000யும் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு RM2,500 கட்டணம் விதிக்கப்படும்.
தகவல்களைப் பெறலாம் என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் ஷா ஆலம் கன்வென்ஷன் சென்டரில்
(SACC) நடைபெற்ற இந் நிகழ்வின் முதல் பதிப்பு 149 கண்காட்சியாளர்கள் மற்றும் 5,000
பார்வையாளர்களின் பங்கேற்பை வெற்றிகரமாக ஈர்த்தது.








