SELANGOR

கோம்பாக், சிப்பாங், உலு லங்காட் உள்ளிட்ட இடங்களில் இன்று மலிவு விற்பனை

15 ஆகஸ்ட் 2023, 3:08 AM
கோம்பாக், சிப்பாங், உலு லங்காட் உள்ளிட்ட இடங்களில் இன்று மலிவு விற்பனை

ஷா ஆலம், ஆக 15- அத்தியாவசிய உணவுப் பொருள்களை குறைந்த

விலையில் வழங்கும் ஏசான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் 11

இடங்களில் நடைபெறுகிறது.

ரந்தாவ் பாஞ்சாங் டேவான் பெலேம்பாங் (காப்பார் தொகுதி), ஜாலான்

தாமான் மெலாவத்தி பெர்மாய் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அல்-

மர்டியா பள்ளிவாசல் (கோம்பாக் தொகுதி), செக்சன் 24, டேவான் செங்கால்

(ஷா ஆலம் தொகுதி), அமான் சியாரா அடுக்குமாடி குடியிருப்பு

(செலாயாங் தொகுதி) ஆகிய இடங்களில் இந்த மலிவு விற்பனை

நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம்

கூறியது.

இவை தவிர, ஜாலான் டத்தோ அப்துல் ஹமிட் 4 (கோத்தா ராஜா

தொகுதி), பெர்மாய் கோர்ட் 2, தாமான் டத்தோ அகமது ரசாலி (சிப்பாங்

நாடாளுமன்றத் தொகுதி), கம்போங் தெங்கா விளையாட்டு மையம் (சுபாங்

ஜெயா தொகுதி), செக்சன் 5, பங்சாபுரி ஸ்ரீ ரிஞ்சிங் ( உலு லங்காட்

தொகுதி), கம்போங் புக்கிட் ஹிஜாவ் ( கோல சிலாங்கூர் தொகுதி) ஆகிய

இடங்களிலும் இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக

அது தெரிவித்தது.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் ஜூவாலான் ஏசான் ராக்யாட் எனும்

பெயரில் நடைபெற்று வந்த இந்த மலிவு விற்பனை தற்போது உள்நாட்டு

வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பங்கேற்புடன்

ஜூவாலான் ஏசான் ரஹ்மா என பெயர் மாற்றம் கண்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட்

மாட்டிறைச்சி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00

வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் கெம்போங் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ

சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00

வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.