SELANGOR

கப்பலில் இருந்த கொள்கலன்களில் ஏற்பட்டத் தீ முற்றாக அணைக்கப்பட்டது

13 ஆகஸ்ட் 2023, 3:53 PM
கப்பலில் இருந்த கொள்கலன்களில் ஏற்பட்டத் தீ முற்றாக அணைக்கப்பட்டது

ஷா ஆலம், ஆக 13- இன்று அதிகாலை இங்குள்ள

கிள்ளான் துறைமுகத்திற்குச் சென்று

கொண்டிருந்த சரக்குக் கப்பலில் இருந்த

கொள்கலன்களில் பற்றியத் தீ முற்றாக

அணைக்கப்பட்டது.

பிந்து கெடாங் தீவில் இருந்து தென்மேற்கே சுமார்

ஆறு கடல் மைல் தொலைவில் பயணித்துக்

கொண்டிருந்த ஷென்சென் கே.எம்.டி.சி. என்ற

அந்தக் கப்பலில் தீப்பற்றியதாக சிலாங்கூர்

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர்

வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

இச்சம்பவம் சம்பவம் குறித்து அதிகாலை 1.30 மணியளவில் தனது துறைக்கு அழைப்பு

வந்ததாகக் கூறிய அவர், கடற்படை மற்றும் மலேசிய கடல்சார் அமலாக்க

நிறுவனம் உள்ளிட்ட தரப்பினர் சம்பவ

இடத்திற்கு உடனடியாக விரைந்ததாகச் சொன்னார்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ

கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக அவர்

தெரிவித்தார்.

காலை 7.30 மணி நிலவரப்படி இரு

கொள்கலன்களில் தொடர்ந்து புகை

வந்தவண்ணம் இருந்ததோடு மேலும் ஒரு

கொள்கலனில் பிசின் கசிவு காணப்பட்டது

என்றும் அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.