கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 10: இந்த சனிக்கிழமை நடைபெறும் மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) பக்காத்தான் ஹராப்பான் புக்கிட் மெலாவத்தி தொகுதி வேட்பாளர் வெற்றி பெற்றால், இவ்வாண்டு போக்குவரத்து மற்றும் கல்வி பிரச்சனைகளை தீர்ப்பதில் உறுதியாக உள்ளார்.
கோலா சிலாங்கூர் நகரம் உட்பட பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், குறிப்பாக வார இறுதி நாட்களில் ஏற்படுகிறது. குடியிருப்பாளர்களின் அன்றாட வழக்கத்தை பாதிக்கும் இப்பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக் கொண்டார் தீபன் சுப்ரமணியம்.
மேலும், நலிவடைந்த வரும் கல்வி நிறுவனங்களின் அடிப்படை வசதிகள் பற்றிய பிரச்சனையைத் தொகுதி குழந்தைகளின் நலனுக்காக மாநில அரசு மற்றும் கல்வி அமைச்சகத்திடம் கொண்டு செல்ல தீபன் விரும்புகிறார்.
“நான் ஒரு பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த வருடம் விரைவில் தீர்க்கப்பட வேண்டிய போக்குவரத்து மற்றும் கல்விப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவேன்.
"அந்த இரண்டு பிரச்சனைகளையும் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் வசிப்பவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகின்றன. மேலும் அவர்களுக்கு இங்கு நல்ல வசதியான வாழ்க்கையை அனுபவிக்க உரிமை உண்டு" என்று தீபன் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, RM100,000 கீழ் ரஹ்மா வீட்டுத் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் பாரம்பரிய கிராமங்களில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை தீபன் கவனம் செலுத்தும் விஷங்களில் அடங்கும்.
பிரச்சாரத்தின் இறுதி நேரத்தில் எதிர்வினைகளை ஆய்வு செய்து, மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை அடையாளம் கண்டு தனது அறிக்கையை வெளியிட்டதாகத் தீபன் விளக்கினார்.
"நான் நிறைய கிராமங்களை வலம் வந்திருக்கிறேன், எனது பிரச்சாரம் அரசியலைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களின் புகார்களைக் கேட்பதற்கும் நேரம் ஒதுக்குகிறேன்.
புக்கிட் மெலாவத்தி தொகுதியில் தீபனுக்கும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் நூரஸ்லி யாஹ்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.








